பொன் முத்துமாரியம்மன் ( பாங்காக்)...
பல்லவி
அன்னையே உன்னையே சரணடைந்தேன்
என்னைக் காத்தருள இதுவே தருணமென்று
அனுபல்லவி
பன்னகாபரணன் பரமேச்வரனும்
பன்னக சயனன் கேசவனும் கொண்டாடும்
சரணம்
அன்னை விசாலாட்சியாய்க் காசியிலும்
தென் மதுரைப் பதிதன்னில் மீனாக்ஷி யாகவும்
இன்னும் காஞ்சியில் காமாக்ஷி யாகவும்
பொன் முத்துமாரியாய் இங்கெழுந்து காட்சிதரும்
No comments:
Post a Comment