வெள்ளியங்குடியில்...
பல்லவி
வெள்ளியங்குடியில் பள்ளிகொண்டிருக்கும்
பாற்கடல் நாதனை மனமாரப் பணிந்தேன்
துரிதம்
வெள்ளியும் பிரமனும் பராசரமுனியும்
நிலமகள் இந்திரன் மயனும் துதித்திடும்
அனுபல்லவி
புள்ளினம் பெயர் பாடும் கோலவில்லிராமனை
அள்ளி அடியார்க்கு அருள் தரும் அச்சுதனை
சரணம்
அன்று மூவடியால் உலகளந்த வாமனனை
வென்று அரக்கர் குலம் சாய்த்தவனைக் கேசவனை
என்றும் மரகதவல்லி மனம் கவர்ந்தவனை
நன்று சிந்தையில் வைத்து சீரடி போற்றி
No comments:
Post a Comment