மந்நாதன்
பல்லவி
எந்நாளும் உந்தன் மலரடியே சரணம்
சென்னகேசவா எனையாண்டருள்வாய்
அனுபல்லவி
மந்நாதனென்றழைத்து வேதவல்லி போற்றும்
பன்னகசயனனே ஶ்ரீபார்த்தசாரதி
சரணம்
தென்னிலங்கை அரக்கனை வதம்செய்த ராமனே
அந்நாளில் பார்த்தனுக்குத் தேரோட்டியாய் நின்ற
பைந்நாகத்தணையானே வேங்கடகிருஷ்ணனே
இந்நாளும் திருவல்லிக்கேணிதனில் காட்சிதரும்
No comments:
Post a Comment