பரமபதநாதன்
பல்லவி
அரவிந்த மலர்ப்பதம் பணிந்திடும் அடிமையை
அரவணைத்தாட்கொள்ள வேண்டினேன் கேசவா
அனுபல்லவி
கரங்களில் சங்கும் சக்கரமுமேந்திய
நரஹரியே ஶ்ரீமன் நாராயணா
சரணம்
நரர்சுரர் நாரதர் சுகசனகாதியர்
அரனயனிந்திரன் அனைவரும் பணிந்தேத்தும்
பரமபத நாதனே பாற்கடல் வாசனே
சரணடைந்தோர்க்கருளும் தீனசரண்யனே
No comments:
Post a Comment