வல்வில் ராமன்
பல்லவி
எல்லாமே நீயென்றே கழலிணை பணிந்தேன்
பொல்லாத கேசவனே எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
பல்லாண்டு பாடிப் பரவிய அடியார்கள்
எல்லோரும் போற்றும் வல்வில் ராமனே
சரணம்
செல்வமகள் செங்கமலம் உடனுறையும் கோமகனே
நல்லவர் வாழவும் தீயவர் மாயவும்
தொல்லுலகில் அவதரித்த தசரதன் மைந்தனே
வல்லரக்கர் குலமழித்த கோதண்டபாணியே
No comments:
Post a Comment