பூரி ஜகந்நாதன்
பல்லவி
நீயன்றி வேறொரு தெய்வமில்லை இப்புவியில்
ஓ ஜகந்நாதனே திருவடி சரணம்
அனுபல்லவி
தாயும் தந்தையும் தோழனும் குருவும்
நீயே அனைத்தும் தீனதயாபரனே
சரணம்
மாயை அகற்றிட மரவடிவாய் தோன்றி
தூய பலராமன் சுபத்திரையுடன் நின்று
ஓயாது பக்தருக்கு பூரியில் காட்சி தரும்
மாயக்கண்ணனே மாலனே கேசவா
No comments:
Post a Comment