ஶ்ரீ வெங்கடேசா
பல்லவி
பற்றினேன் மலர்ப் பதம் ஶ்ரீ வெங்கடேசா
உற்ற துணை நீயே திருமலைவாசா
அனுபல்லவி
நற்றவ முனிவரும் நான்முகனும் நாரதரும்
கற்றறிந்த வேதியரும் பணிந்திடும் கேசவா
சரணம்
கற்றதும் பெற்றதும் கடைவழிக்கு வாராது
உற்றமும் சுற்றமும் சதமில்லையென்றறிந்தே
வெற்றுடம்புக் கூட்டிலுயிர் பிரியும் முன்னே
பற்றறுத்திடவே வேண்டுமெனத் துதித்து
No comments:
Post a Comment