மகாதேவன்
பல்லவி
மாசிலாமணியை மகாதேவனை
ஈசனைக் கேசவன் நேசனைத் துதித்தேன்
அனுபல்லவி
தேசுடை சிவனை சசிசேகரனை
காசினி போற்றும் மாதொருபாகனை
சரணம்
பாசத்தளைகளைக் களந்திடும் மகேசனை
வீசு தென்றலாய் விளங்கிடும் நேயனை
வாச மலர் தூவி பூசனைகள் செய்து
ஆசுகவி பாடி மலரடி பணிந்து
No comments:
Post a Comment