கத்திரிக்காய் கணபதி
பல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் கணபதியைத் துதித்தேன்
மங்களம் தந்தெனை ஆண்டருள வேண்டுமென
அனுபல்லவி
பங்கயநாபன் கேசவன் மருகனை
சங்கரன் மைந்தனை துங்கக்கரிமுகனை
சரணம்
அங்கமில் மன்மதனை மிஞ்சும் அழகுடையவனை
பொங்கரவு இடையணிந்த பங்கயபாதனை
திங்கள் பிறை சூடிய ஒற்றைக்கொம்பனை
மங்காத புகழ் மேவும் விக்ன விநாயகனை
No comments:
Post a Comment