மயூரவல்லி
பல்லவி
பங்கயமலரமர் செங்கமலவல்லியை
திங்கள் திருமுகத்தாளை போற்றிப்பணிந்தேன்
அனுபல்லவி
பங்கயநாபன் கேசவன் திருமார்பில்
தங்கிப்பொலிவுடன் பக்தருக்கருளும்
சரணம்
நங்கையர் பணிந்தேத்தும் மங்களநாயகியை
தங்கும் பொருளளிக்கும் தீனதயாபரியை
சங்கரியும் சரஸ்வதியும் நேசிக்கும் திருமகளை
மங்காத புகழ் மேவும் மயூரவல்லியை
No comments:
Post a Comment