அங்கையற்கண்ணி
பல்லவி
கையில் கிளியேந்திநிற்கும் அங்கையற்கண்ணியை
மெய்யுருகித்துதித்தேன் எனக்கருள வேண்டுமென
அனுபல்லவி
தையல்நாயகியை தீனதயாபரியை
பையத்துயிலும் கேசவன் சோதரியை
சரணம்
வையகம் போற்றும் மதுரை மாநகரை
அய்யன் சுந்தரேசனுடனமர்ந்து ஆட்சி செய்யும்
பைந்தொடியை மலைமகளை மீனாட்சி அன்னையை
மெய்யடியார் போற்றும் திரிபுரசுந்தரியை
No comments:
Post a Comment