அரவிந்த பதம்......
பல்லவி
அரவிந்த பதம் பணிந்தேன் ஶ்ரீ லலிதாம்பிகையே
அரவணைத்தெனையே ஆட்கொள்ள வேண்டியே
துரிதம்
நரர்சுரரிந்திரன் அரனரி அயனும்
கரம் பணிந்தேத்தும் கருணைக் கடலே
அனுபல்லவி
சரவணன் தமையன் கரிமுகனும் வணங்கிடும்
பரமேச்வரியே கேசவன் சோதரி
சரணம்
நிரந்தரமில்லாத மாயா உலகில்
நிரந்தரம் நீயே மீயச்சூர் தாயே
கரங்களில் வளையும் கால்களில் கொலுசும்
சிரந்தனிலிளம் பிறையும் சூடிடும் சுந்தரியே
No comments:
Post a Comment