தங்கமலைதனில்.....
பல்லவி
தங்கமலைதனில் வீற்றிருப்பவளே
ஶ்ரீ லலிதாம்பிகே உனதருள் வேண்டினேன்
அனுபல்லவி
சங்கும் சக்கரமும் கரங்களிலேந்தும்
பங்கயநாபன் கேசவன் சோதரி
சரணம்
சங்கரன் பங்கிலுறை சங்கரி கௌரி
சங்கடம் களைந்தருளும் அகிலாண்டேஸ்வரி
மங்களம் தந்திடும் திரிபுரசுந்தரி
எங்கும் நிறைந்திருக்கும் மீயச்சூர் தாயே
தருமநெறி தவறி தவறுகள் பல புரிந்தேன்
கருமவினைப் பயனால் கட்டுண்டு கிடந்தேன்
கருணைக்கடலே உனதருளாலின்று
வருந்தி மனம் திருந்தி உனையே துதித்தேன்
துரிதம்
அருந்தவ முனிவரும் தேவரும் மூவரும்
அருமறை திருமகள் கலைமகள் மற்றும்
முருகன் கணபதி அனைவரும் பணிந்திடும்
பெருமைக்குரிய மீயச்சூர் தாயே
No comments:
Post a Comment