மறவேன்.....
பல்லவி
மறவேன் என்றுமுந்தன் அரவிந்த மலர்ப்பதம்
கறவைகள் மேய்த்திடும் கண்ணனே கேசவா
துரிதம்
சுரபதி கணபதி தேவசேனாபதி
பசுபதி ரதிபதி பணிந்திடும் ஶ்ரீபதி
அனுபல்லவி
அறவோரும் அருந்தவ முனிவரும் துதித்திடும்
பரம்புருஷனே பண்டரி நாதனே
சரணம்
குறையொன்றுமில்லாத மலனே கோவிந்தா
பிறையணி உமையவளின் அன்பு சோதரனே
மறைபுகழும் மாதவனே மதுசூதனனே
கறைபிறவிப் பிணி தீர உனதருள் வேண்டினேன்
No comments:
Post a Comment