Monday, 25 November 2019






மணித்வீப கணபதி

பல்லவி

மணித்வீப கணபதியை மனமாரத்துதித்தேன்
வணிகம் வளர்ந்து வரும் நெய்வேலித்தலத்திலங்கும்

துரிதம்

 கணங்கள் நந்தி அயனரன் கேசவன் நரர்சுரர் இவருடன்
 அணங்குகள் சித்தியும் புத்தியும் பணிந்திடும் ஆனைமுகத்தோனை 


அனுபல்லவி

அணிமாசித்திகளும் தேவரும் முனிவரும்
தணிகாசலனும் கரம்பணிந்தேத்தும்

சரணம்

மணித்துளிகளாதவன் மாசி மாதத்தில்
கணபதியின் கழலடியை கிரணங்களாலே
பணிந்து ஒளிவீசி அழகுறச்செய்திடும்
இனிய காட்சியை பக்தருக்களித்திடும்



 




நெய்வேலி நகரம்ஸத்சங்கம் - மணித்வீபம்ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஆலயம் - சூரிய பூஜை - வருடத்தில் மாசி மாதத்தில் சில நாட்கள் மட்டுமே காணக்கிடைக்கும் ஒரு அற்புத நிகழ்வு. சூரியன் மாலை நேரத்தில்தனது ஒளி மிகு கரணத்தினால் விநாயகரைப் பணிந்து விடைபெறுகின்றான். சூரிய ஒளியின் தங்க நிறத்தினால் விநாயகர் தகதகக்கின்றார். வருடத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே நடக்கும் அரிய நிகழ்வு.

No comments:

Post a Comment