ஞானவிநாயகனை.....
பல்லவி
ஞான விநாயகனை ஆனை முகத்தோனை
தீனனெனக்கருள வேண்டுமெனத் துதித்தேன்
துரிதம்
நந்தி கணங்கள் அரனரியயனுடன்
இந்திரன் சந்திரன் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
ஆனிறை மேய்த்திடும் கேசவன் மருகனை
வானுறை தேவரும் முனிவரும் பணிந்திடும்
சரணம்
பானுவை விடவும் ஒளி மிகுந்தவனை
ஆனந்தம் தந்திடும் ஆதி தேவனை
கானமும் கலைகளும் ரசித்திடும் அரன்மகனை
பானை வயிற்றானை பக்தருக்கருள்பவனை
No comments:
Post a Comment