தாயேயுன்.....
பல்லவி
தாயேயுன் சேயெனைக் காத்தருள வேண்டினேன்
மாயே ஶ்ரீ லலிதா திரிபுரசுந்தரி
துரிதம்
அயனரி அரனும் தேவரும் முனிவரும்
காவற்பெண்டிரும் அனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
நீயேயென் துணை கேசவன் சோதரி
தூயவளே உந்தன் மலரடி பணிந்தேன்
சரணம்
ஓயாதுன் நாமங்கள் ஓராயிரம் தனை
வாயார ஓதி மனமாரத் துதித்தேன்
தேயாத புகழ் மேவும் திருமீயச்சூரில்
நீயாக எழுந்தருளிக் கருணையுடன் காட்சி தரும்
No comments:
Post a Comment