அகிலமுய்யவென.....
பல்லவி
அகிலமுய்யவென அத்தனூர் திருத்தலத்தில்
தோன்றிய ஶ்ரீ லலிதா திரிபுரசுந்தரி
அனுபல்லவி
மகிடன் தலை கொய்த மகமாயி மாகாளி
அகிலாண டேச்வரி கேசவன் சோதரி
சரணம்
இகபரமிரண்டிலும் சுகமளிப்பவளே
சுகவனேச்வரன் பங்கிலுறைபவளே
புகலென உனையே சரணடைந்தேன்
சகம் புகழுமன்னையே சாமுண்டேச்வரி
ராகம்: ஹேமவதி
தாளம்: ஆதி
No comments:
Post a Comment