ஒற்றைக்கொம்பன்
பல்லவி
ஒற்றைக் கொம்பனின் சரணகமலங்களை
பற்று நீங்கவே பற்றித் துதித்தேன்
அனுபல்லவி
கற்றவர் ஞானியர் பாமரர் யோகியர்
நற்றவ முனிவர்கள் தேவர்கள் பணிந்திடும்
சரணம்
கருமங்கள் தொடங்கும் முன் அனைவரும் வழிபடும்
முழு முதற்கடவுள் ஆனை முகத்தோன்
பெருமைக்குரிய கோமந்தகத் தலத்தில்
கருணையுடன் வீற்றிருக்கும் கேசவன் மருகன்
ராகம்: வராளி
தாளம்: ஆதி
No comments:
Post a Comment