கழல் பணிந்தேன்.....
பல்லவி
கழல் பணிந்தேன் காமாக்ஷி அருள் புரிவாய்
அழலேந்தும் ஏகாம்ரேச்வரன் துணைவியே
அனுபல்லவி
நிழல் தரும் மாவிருட்சமும் நீயே
வழக்கெதற்கு என்னிடம் கேசவன் சோதரி
சரணம்
பழவினைப் பயன்களால் உழன்றிடும் எனையே
அழவைத்துக் காண்பதில் உனக்கென்ன மோகம்
மழலையென் மொழியுமுன் செவியில் விழவில்லையா
பழுதின்றி உன் நாமம் பாடித் தொழுது
தாளம்:மிச்ர திரிபுடை
No comments:
Post a Comment