மீயச்சூர் சிவனுனை......
பல்லவி
மீயச்சூர் சிவனுனை மேகநாதனை
நேயமுடன் துதித்து மனமாரப்பணிந்தேன்
அனுபல்லவி
தாயும் தந்தையும் குருவுமாகிய
பரமேச்வரனைக் கேசவன் நேசனை
சரணம்
தீயவனாய்த் திரிந்தேன் தீச்செயல்கள் புரிந்தேன்
மாயா உலகினில் நாயாயலந்தேன்
தூயவனே உந்தன் கடைக்கண்ணருளால்
சேயெனைக் கனிவுடன் காத்திட வேண்டியே
No comments:
Post a Comment