அச்சுதன்......
பல்லவி
அச்சுதன் அனந்தன் கோவிந்தன் நாமம்
உச்சரித்தால் போதும் வருந்துயர் நீங்கும்
அனுபல்லவி
அச்சம் பழவினைப் பயன்கள் தீரும்
சச்சிதானந்தம் வந்து சேரும்
சரணம்
அரனயன் மனத்தினில் துதித்திடும் நாமம்
நரர் சுரர் நாரத முனிவரும் மற்றும்
அவனியோர் போற்றும் கேசவன் நாமம்
அடியாரனைவரும் வணங்கிடும் நாமம்
தாளம்: சாபு
No comments:
Post a Comment