கபாலீச்வரன்
பல்லவி
அருள் தரும் கபாலீச்வரனின்
பாதகமலங்களைப் பற்றி வணங்கினேன்
அனுபல்லவி
பொருள் புகழ் போகம் எதுவும் வேண்டேன்
இருளெனும் மாயை விலகவே வேண்டினேன்
சரணம்
குருவும் தந்தையும் தாயுமனவன்
திருவின் நாயகன் கேசவன் நேசன்
அருந்தவம் புரிந்திடும் முனிவர்கள் போற்றும்
கருணையே வடிவான மாசிலா ஈசன்
No comments:
Post a Comment