Friday, 28 February 2025

கரும்பே தேனே…..



" திருவாசகத்திற்க்கு உருகாதார் ஒரு வாசகத்திற்க்கும் உருகார் "
யானே பொய் என் நெஞ்சும் பொய்
என் அன்பும் பொய் ஆனால் வினையேன்அழுதால்
உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன்
உனைவந்து உறுமாறே - திருச்சிற்றம்பலம்.

பொருள் : பெரியன யாவற்றிற்க்கும் பெரியவனே!
யானும், என் நெஞ்சும், என் அன்பு எல்லாம் பொய்யே! ஆயினும் உனதன்பு வேண்டிக் கசிந்து 
உருகி அழுதால் உன் திருவருளைப் பெறலாம் அல்லவா! உன்னை எண்ணும் அளவு எனக்குப் பேரின்பம் மே-டுகிறது. தேன் போலும், அமுது போலும், கரும்பு போலும் தித்திக்கும் தெய்வமே. உன்னை அடையும் உண்மை வழியை எனக்கு உரைத்தருள வேண்டும் ஐயனே. உன்னை வணங்குகிறேன். - சிவாயநமஹ🙏
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே!




                                 கரும்பே தேனே…..


                                    பல்லவி

                      கரும்பே தேனே தித்திக்கும் தெள்ளமுதே
                      திருவே உனையடையும் வழியுரைப்பாயே
  
                                  அனுபல்லவி
                       
                      அருவுருவான சிவமே கேசவன் நேசனே
                      உருகியழைத்தேன் உனதருளே வேண்டினேன்

                                     சரணம்

                      யானே பொய் என் நெஞ்சும் பொய்
                      ஊனுடம்பும் பொய்யென்னன்பும் பொய்
                      ஆனாலும் வினையேன் உனைவந்து உறுமாறு
                      மானே மாயனே என் தாயுமானவனே
       

No comments:

Post a Comment