திருமகள் சீதையை……
பல்லவி
திருமகள் சீதையை வனத்தில் கண்ட
மாருதி மனத்தில் பளிச்சிட்டதெண்ணம்
அனுபல்லவி
வருத்தமுடனவள் அமர்ந்திருந்தாலும்
கருணைக்குமழகிற்குமன்னயே மேலென
சரணம்
பொருத்தமன்னை ஜானகியே ராமனுக்கு
இருவரும் அழகில் பண்பில் ஞானத்தில்
ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லையென
கருதினானந்த கேசவன் தூதன்
तुल्यशीलवयोवृत्ताम् तुल्याभिजनलक्षणाम् |
राघवोऽर्हति वैदेहीं तं चेयमसितेक्षणा ||
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபி ஜன லஷணாம் –
ராகவ அர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸி தேஷணா
இப்பொழுது வால்மீகி ஒரு ஸ்லோகம் போடுகின்றார். ராமனுக்கேத்த சீதை, அழகாலும், பண்பாலும், வயதாலும், உயரத்தினாலும், ஞானத்தினாலும், எல்லாவற்றினாலும் மிகமிகப் பொருத்தமாக இருந்தாள். ஒரு குன்றுமணி எடைகூட கூடுதல் குறைவின்றி இருந்ததாள்.
Sri Rama is suited to Seetha with Her well matched character, age and conduct; with well matched pedigree and characteristics this black-eyed Seetha is also suited to Him
No comments:
Post a Comment