பாடாமலிருப்பேனோ….
பல்லவி
பாடமலிருப்பேனோ பழனியாண்டவனை
நாடாமலிருப்பேனோ அவனிரு திருவடியை
அனுபல்லவி
கோடானு கோடி முனிவர்களுமடியாரும்
நாடுமந்தக் குமரனை தேவாதி தேவனை
சரணம்
தாடாளன் கேசவன் விரும்பும் மருகனை
ஆடவல்லான் மகனை ஆறுமுகப்பெருமானை
ஈடிணையில்லாத சிங்காரவேலனை
வாடாமலர் தூவிப் பதமலர் பணிந்து
No comments:
Post a Comment