நாராயணா உன்னை……
பல்லவி
நாராயணா உன்னை நினைக்காத நேரமுண்டோ
ஆராவமுதனே கேசவனே மாதவனே
அனுபல்லவி
ஶ்ரீராமனும் நீயே ஶ்ரீக்ருஷ்ணனும் நீயே
மாரனைப் பிரமனைப் படைத்தவனும் நீயே
சரணம்
காரார் குழலாள் திருமகளைத் திருமார்பில்
மாறாமல் வைத்திருக்கும் மதுசூதனனே
பேராயிரம் கொண்ட சாரங்கபாணியே
தீராவினை தீர்க்கும் திருவரங்கப் பெருமாளே
கோர அரக்கர்களை வதம் புரிந்தவனே
சாரநாதனாய்த் திருசேறை உறைவோனே
சாரதியாயன்று தேர்நடத்திய கண்ணனே
பாரோர் பணிந்தேத்தும் பரமபதநாதனே
No comments:
Post a Comment