கார்த்திகேயனே….
பல்லவி
கார்த்திகேயனே கரம் பற்றி எனக்கருள்வாயே
கீர்த்தி மேவும் திருப்பரங்குன்றத்துறைவோனே
அனுபல்லவி
பார்வதி மைந்தனே கேசவன் மருகனே
கார்த்திகைப் பெண்டிர் வளர்த்த குமரனே
சரணம்
சீர்மல்கும் தணிகை மலைதனில் வீற்றிருப்பவனே
ஆர்த்தெழுந்த சூரனையழித்த செந்தில்நாதனே
மூர்த்தி தலம் தீர்த்தமனைத்திலும் சிறந்த
பார் போற்றும் பதி பழனியிலுறைபவனே
No comments:
Post a Comment