பிழைத்திருக்கும் வரை……
பல்லவி
பிழைத்திருக்கும் வரை உனையே துதிப்பேன்
அழகனே கேசவனே எனையாண்டருள்வாயே
அனுபல்லவி
அழைத்ததுமானைக்கருளிய ஆதிமூலமே
மழைதடுத்த மாதவனே கோவர்த்தனகிரிதாரி
சரணம்
குழையணிந்த மகர நெடுங்குழைக்காதனே
குழலூதி மனங்களை மயக்கும் கண்ணனே
அழலேந்தும் சிவனும் பிரமனும் நரர்சுரரும்
கழலடி பணிந்தேத்தும் நாராயணனே
No comments:
Post a Comment