கருநிறவண்ணனை…..
பல்லவி
கருநிறவண்ணனைக் கமலக்கண்ணனை
திருவடி பணிந்து மனமுருகித்துதித்தேன்
அனுபல்லவி
பெருமைக்குரிய கேவனை மாதவனை
இருவினைப்பயன் நீக்கும் நாராயணனை
சரணம்
தரும நெறி காக்க தரணியிலவதரித்த
கருணாமூர்ததியை கமலநாபனை
திருவென்னும் பாமா ருக்மணி நாயகனை
அருமாகடலமுதை அனந்தசயனனை
No comments:
Post a Comment