மன்னை மன்னனை……
பல்லவி
மன்னை மன்னனை மன்னார்குடி அழகனை
மன்னு புகழ் ஶ்ரீராஜகோபாலனைத்துதித்தேன்
அனுபல்லவி
அன்னை யசோதை கொண்டாடும் பாலனை
என்னை ஆண்டருளும் சென்னகேசவனை
சரணம்
இன்னலிடர் களையும் மாலனை மதுசூதனனை
தன்னிகரில்லாத தனிப்பெருங்கடவுளை
கன்னலைத்தேனை இன்னமுதை கரும்பை
தென் துவாரகையென விளங்கும் திருத்தலத்தில்
No comments:
Post a Comment