காமாட்சி.......
பல்லவி
காமாட்சி உனைப் பணிந்தேன்
நலன் பேணும் என் அன்னையே
துரிதம்
கருணை பெருகும் மதிவதனமும்
அரவிந்த பதமும் திகழ் காஞ்சி
அனுபல்லவி
மாமாயன் கேசவன் சோதரி
ஏகாம்ரேச்வரன் ப்ரிய சகி
சரணம்
ஓமெனும் பிரணவ மந்திரப் பொருளாகி
நாமமாயிரம் கொண்ட நாமநாராயணி
நாமகள் பூமகள் போற்றும் புவனேச்வரி
மாமேருவிலமர் லலிதாதிரிபுரசுந்தரி
தாளம்: ரூபகம்
No comments:
Post a Comment