ஶ்ரீ பாலசுப்ரமண்யனை.......
பல்லவி
ஶ்ரீ பாலசுப்ரமண்யனை மனமாரத்துதித்தேன்
ஆபத்திருளறச் செய்திடும் தேவர் தலைவனை
அனுபல்லவி
கோபாலபுரம் வளர் (ஶ்ரீ) வேணுகோபாலன் மருகனை
பூபாலரும் வானவரும் சுகசனகாதியரும் போற்றும்
சரணம்
பாப புண்ணிய வினைப் பயன்களை நீக்கி
தாமத்ரயங்களில் உழலாமல் காத்தெனை
காபந்து செய்தருளும் கார்த்திகேயனை
ஆபத்பாந்தவனைக் கேசவன்நேசனை முருகனை
தாளம்: மிச்ரதிரிபுடை
No comments:
Post a Comment