பிரகலாதவரதன்
பல்லவி
பிரகலாதவரதன் பாதம் பணிந்தேன்
அரனயன் பணிந்திடும் பங்கயபதத்தினன்
அனுபல்லவி
கிரகங்களும் தேவரும் முனிவரும் வணங்கிடும்
நரசிம்மன் கேசவன் நலம் தரும் நாரணன்
சரணம்
பிரகலாதன் அழைத்ததும் தூணினைப் பிளந்துவந்து
இரணியனை வதைத்த பரமபத நாதன்
கரமலர்தனிலே கமலமலரேந்தும்
திருமகள் அமிர்தவல்லி மனங்கவர் நாதன்
No comments:
Post a Comment