அருணாச்சலனே....
பல்லவி
அருணாச்சலனே அருந்தேனே
ஒரு நாளும் நானுனை மறவேனே
அனுபல்லவி
திருவண்ணாமலையில் எழுந்தருளிக் காட்சி தரும்
கருணாகரனே கேசவன் நேசனே
சரணம்
இருவினைப் பயனால் நான் படுந்துயரை
கருணையுடன் நீக்கி காத்தருள வேண்டினேன்
தருமநெறி காக்க தரணியில் அவதரித்த
பெருமைக்குரியவனே திருக்கயிலை வாசனே
No comments:
Post a Comment