கிழக்கு முகம்.......
பல்லவி
கிழக்கு முகம் நோக்கி அமர்ந்திருக்கும் சிவனை
வழக்கறுத்தீச்வரனை மனமாரப் பணிந்தேன்
அனுபல்லவி
அழகினில் மன்மதனை மிஞ்சும் பேரழகனை
குழலோன் கேசவனின் நேசனை ஈசனை
சரணம்
பழவினைப் பயன்களால் படுந்துயர் நீங்கிடவும்
பிழைகள் பல புரிந்த எனையாண்டருளவும்
வழக்குகள் பிணக்குகள் அனைத்தையும் தீர்ப்பவனை
கழலடி பணிந்து அனுதினம் துதித்து
No comments:
Post a Comment