எங்கும்......
பல்லவி
எங்கும் எப்போதும் ராம நாமமே
தங்கு தடையின்றி உரைத்திடுவாய் மனமே
அனுபல்லவி
சங்கும்சக்கரமும் வைத்திருக்கும் கேசவன்
பங்கய நாபனவன் திருவடி நினந்து
சரணம்
மங்களம் தரும் சங்கடம் களைந்திடும்
பொங்கும் மூவாசைப் பிணிகளைப் போக்கும்
சங்கரன் பங்கிலுறை உமைக்கோதிய நாமம்
வெங்கதிரோன் குலத்துதித்த ரகுராமன் நாமம்
No comments:
Post a Comment