சிங்க வேள் குன்றம்தனில்....
பல்லவி
சிங்கவேள் குன்றம்தனில் அழகுற வீற்றிருக்கும்
சிங்க முகப்பெருமானை கேசவனைத் துதித்தேன்
அனுபல்லவி
பங்கயச் செல்வியை மணிமார்பில் தாங்கும்
சங்கும் சக்கரமும் கையிலேந்தும் மாதவனை
சரணம்
வெங்கதிரோன் ஒளியையும் மிஞ்சும் ஒளியுடையவனை
அங்கமில் மன்மதனின் அழகினும் பேரழகுடையவனை
அங்குமிங்குமலைபாயும் மனக்குரங்கையடக்கிடவும்
பொங்கும் மூவாசைப் பிணிதனையே போக்கிடவும்
No comments:
Post a Comment