பருகிடுவோம் .......
பல்லவி
பருகிடுவோம் ராம நாம ரசம்
உருகியவனிரு திருவடி நினந்து
அனுபல்லவி
இருவினைப் பயன்கள் அனைத்தும் நீங்கிடும்
பெருகிடும் கருணையால் பவச்சுழல் விலகிடும்
சரணம்
பெருமைக்குரிய சுகசனகாதியரும்
கருத்திலிருத்திப் போற்றிய திருநாமம்
தரும சாஸ்த்ர வேத புராணங்களின்
பொருள்களும் பொதிந்த திருநாமம்
குரு வால்மீகியும் வசிஷ்டரும் போற்றும்
திருமகன் கேசவன் அயோத்திமன்னன்
பெரும் புகழுரைத்திடும் திருநாமம்
வருமிடர் களைந்திடும் திருநாமம்