ஆயிரம் நாமங்கள்.......
பல்லவி
ஆயிரம் நாமங்கள் ஓதியழைத்தேனே
நீயின்னும் எனக்கருள திருவுள்ளமில்லையோ
அனுபல்லவி
நோயும் நோய் தீர்க்கும் மருந்தும் நீயே
தாயினும் பரிவுடனே தயவளிக்கும் கேசவனே
சரணம்
பாயிரம் பதிகங்கள் பாடிப் பயின்றேன்
கோயில் குளமென்று உனைத்தேடியலைந்தேன்
நீயருகிலிருப்பது அறியாமல் திரிந்தேன்
மாயவனே மனமிரங்கி ஆண்டருள வேண்டும்
No comments:
Post a Comment