அடியார்க்கு மெய்யனை........
பல்லவி
அடியார்க்கு மெய்யனை தெய்வநாயகனை
அடிபணிந்து துதித்தேன் அயிந்தை திருத்தலத்தில்
அனுபல்லவி
கொடியிடையாள் செங்கமல வல்லியின் மனங்கவர்
நெடுமாலைக் கேசவனை தேவாதி தேவனை
சரணம்
செடியாய வல்வினைகள் தீர்த்தருளும் திருமாலை
முடிவும் முதலும் இல்லாத மாதவனை
அடியாரும் வானவரும் முனிவர்களும் பணிந்தேத்தும்
வடிவான சோதியை வைகுண்ட வாசனை
No comments:
Post a Comment