பதம் பணிந்தேன்...
பல்லவி
பதம் பணிந்தேன் ஶ்ரீ பத்மநாபா
இதமுடன் எனக்கருள வேண்டுமெனத் துதித்து
அனுபல்லவி
வதம் செய்து அரக்கரின் குலமழித்தவனே
மதுசூதனனே மாதவனே கேசவனே
சரணம்
நிதமுனைத்துதித்திடும் அடியவர்க்கெல்லாம்
உதவிடும் திருமாலே பக்தவத்சலனே
சதமுனது திருவடி நிழலன்றி வேறு
எதுவும் சதமல்ல தீனசரண்யனே
No comments:
Post a Comment