ஶ்ரீசொர்ணவல்லியை...
பல்லவி
ஶ்ரீசொர்ணவல்லியை மனமாரத் துதித்தேன்
ஈசன் முக்தீச்வரன் உடனுறை அன்னையை
அனுபல்லவி
பாசமுடன் ஆதி கணபதியும் போற்றும்
கேசவன் சோதரி மாசற்ற ஈச்வரி
சரணம்
வாசமலர் மாலை மணிமாலை பொன்மாலை
ஆசையுடன் பல பல ஆபரணங்கள் பூட்டி
தேசுடன் திலதர்ப்பணபுரிதனில் இருப்பவளை
நேசமுடன் என்னை ஆண்டருள வேண்டுமென
No comments:
Post a Comment