கழலடி நிழலே......
பல்லவி
கழலடி நிழலே போதும் கேசவா
அழகிய உனதிரு அரவிந்த பதமெனும்
அனுபல்லவி
குழலிசையாலுலகை வசப்படுத்தும்
அழகனே ஆயர் குலத்துதித்த மாயனே
சரணம்
அழல் நீர் காற்று நிலம் நீள் விசும்பென
அனைத்துமானவனே ஆனந்தத்தேனே
துழாய் மாலையும் கௌத்துபமும் அணிந்தவனே
மழைதடுக்க குன்றை குடையாய்ப் பிடித்தவனே
No comments:
Post a Comment