அரங்கன் கேசவனை.........
பல்லவி
அரங்கன் கேசவனை மனமாரத் துதித்து
அரவிந்த பதமலர் சரணடைந்தேன்
அனுபல்லவி
மரணம் பிறப்பெனும் பவச்சுழல் நீக்கி
பரகதி தந்தெனை ஆட்கொள்ள வேண்டுமென
சரணம்
நரர்சுரரும் நாரதரும் சுகசனகாதியரும்
பிரமனுமிந்திரனும் அனந்தனும் கருடனும்
அரக்கன் ராவணனின் இளையவன் வீடணனும்
கரம் பணிந்தேத்தும் கருணைக்கடலை
No comments:
Post a Comment