ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்
ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம் :
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்
ஜாதவேதோ ம ஆவகா |
சென்னையம்பதிதனில்...
பல்லவி
சென்னையம்பதிதனில் பொலிவுடன் கொலுவிருக்கும்
அன்னை செங்கமலவல்லியைப் பணிந்தேன்
அனுபல்லவி
கன்மவினைப்பயன்கள அனைத்தும் தொலைந்திடவும்
சன்மம் இனியும் எடுக்காமல் தடுத்திடவும்
சரணம்
பொன்வண்ண மேனியளை மின்னும் அழகுடையாளை
பொன்னும் மணியும் அணிகலனும் தரித்தவளை
பன்னகசயனன் கேசவன் மார்பிலுறை
இன்முகம் காட்டும் திருமகளைத் துதித்தேன்
No comments:
Post a Comment