குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் ... !!!
நாராயணா என்னும் நாமமே....
பல்லவி
நாராயணா என்னும் நாமமே போதும்
பாரினில் அனைத்து நன்மையும் பெறவே
அனுபல்லவி
ஆராவமுதன் கேசவன் தாள் பணிந்து
மாறாத பக்தியுடன் அனுதினம் துதித்திட
சரணம்
தீராவினை தீர்க்கும் திருவருள் சேர்க்கும்
பாராளும் செல்வமும் நலன் பலவும் தரும்
சீரும் சிறப்பும் அடியார்கள் நல்லுறவும்
ஊர் போற்றும் பேரும் புகழுமளித்திடும்
No comments:
Post a Comment