சாமுண்டேச்வரியின்....
பல்லவி
சாமுண்டேச்வரியின் பாத கமலங்களை
சரணடைந்தேன் பவ வினைகளைக் களைந்தேன் (ஶ்ரீ)
அனுபல்லவி
பாமணியாறும் வயல்களும் சூழ்ந்த
பூமண்டலந்தனில் புகழுடன் விளங்கிடும் (ஶ்ரீ)
சரணம்
சதுரங்கவல்லபநாதன் சிவனும்
கற்பகவல்லியும் ராஜராஜேஸ்வரியும்
நேசமுடன் அருகிருந்து பாசமுடன் போற்றும்
ஆதிபராசக்தி கேசவன் சோதரி