அகிலாண்டேஸ்வரி ....
பல்லவி
அகிலாண்டேஸ்வரி மலர்ப் பதம் பணிந்தேன்
இகபரமிரண்டிலும் சுகமளிப்பவளே
அனுபல்லவி
புகலிடம் வேறொன்றறியேன் அன்னையே
அகிலமனைத்தையும் காத்திடும் உமையே
சரணம்
சுகசனகாதி முனிவரும் தேவரும்
மகபதியும் விதியும் பணிந்திடும் தேவி
மகிஷாசுரமர்த்தினி சங்கரி
சகம் புகழும் சென்ன கேசவன் சோதரி
No comments:
Post a Comment