குருவாயூர்....
பல்லவி
குருவாயூர் தலம் வளர் பாலகிருஷ்ணனை
குருவாயுரப்பனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
விரும்பித் துதித்திடும் பக்தருக்கெல்லாம்
அருட்கரம் நீட்டி அபயமளித்திடும்
சரணம்
சனகாதி முனிவரும் தேவரும் பிரமனும்
அனைத்துலக மாந்தரும் மதித்துப் போற்றும்
நினைத்தாலே இனிக்கும் நிர்மால்ய தரிசனம்
தனையளித்தெனையே ஆட்கொண்ட கேசவனை
No comments:
Post a Comment